Add caption |
கண்களும் கவி பாடுமே என்பதற்கிணங்க கொஞ்சும் சலங்கையாய், கொத்தி செல்லும் கழுகினும் கூர்மை, விழி மூடி யோசித்தாலும் நீங்காத குளுமை, கலங்காத நெஞ்சையும் சற்றே கிறங்கடிக்கும் புதுமை, இனிது சொல்லும் இதழை சுவைக்கும் இளமையின் இனிமை ........ இது கயல் விழி மட்டும் அன்று கவிதையின் சுரங்கமும் கூட
கயல் விழி
Wednesday, April 24, 2013
Tuesday, April 23, 2013
கல்வியின் சிறப்பு
கற்றவர் செல்லும் இடமெல்லாஞ் சிறப்பு - கல்வி
கற்றதனா லன்றி வருமோவிச் சிறப்பு
மாபெருஞ் சபைகளில் மாண்புடைச் சிறப்பு
யாவரும் போற்றிடும் கல்வியின் சிறப்பு
கண்ணீர்
''மனம் ஒரு குழந்தை மாதிரி...
சந்தோஷத்தை மட்டும் தான் எடுத்துக் கொள் ளும்.''
நான் பெண்கள் பலர் அழுததைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் ஒரு ஆண் கூட அழுததை இதுவரை பார்த்ததில்லை.
சந்தோஷத்தை மட்டும் தான் எடுத்துக் கொள் ளும்.''
நான் பெண்கள் பலர் அழுததைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் ஒரு ஆண் கூட அழுததை இதுவரை பார்த்ததில்லை.
Monday, April 22, 2013
முகப் புத்தகம்
நொடிக்கு நொடி கணினித் துறையின் வளர்ச்சியால் பல நன்மைகள் இருப்பினும் எமது கலாச்சாரம் பாதிப்படைந்து வருகிறது.குறிப்பாக இன்டநெட் மூலம் முகம் பார்த்துப் பேசுதல்,chating செய்தல் என சிலவற்றைக் கூறலாம்.
Sunday, April 21, 2013
பொறுப்புடன் நடப்போம் ........
அரசின் கவனத்திற்கு ...
வவுனியா வீரபுரத்தில் உள்ள மக்கள் பொது வைத்தியசாலை வசதி இன்றி அவதிப்படுகின்றனர் இக் கிராமத்தில் 400 வீடுகள் காணப்படுவதோடு சுமாராக 618 குடும்பங்கள் உள்ளன . இந்நிலையில் இங்கு வைத்தியசாலை இல்லாமல் அம்மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது .
Saturday, April 20, 2013
peradeniya park
peradeniya park |
peradeniya parkd |
peradeniya park |
peradeniya park |
கண்டியில் உள்ள பெரதெனிய பூங்காவிற்கு சென்றபோது என் கண்ணில் பட்டவை
Friday, April 19, 2013
புதுமைப்பெண்
பெண்ணிற் பெரியன யாவுள பெண்ணெனும்
பிறப் பெடுத்து நற்பேறுகள் பெற்றனள்
காற்றிலேறி யவ்விண் ணையுஞ் சாடினள்
கல்பனா அவள் பேரெனக் கேட்டனம்
கடலி லோடியத் திரை கிழித்தனள்
கன்னி நாமம் ப்ரியாவெனக் கேட்டனம்
உலகிலே பலபெண்க ளிவ்வா றெலாம்
உயர்ச்சி பெற்றனர் முயற்சி கைகூடின
ஏட்டைப் பெண்கள் தொடுவது தப்பென
எண்ணி நின்றவர் சிரம் கவிழ்ந்தனர்
வீட்டைக் காத்தவள் நாட்டை ஆண்டனள்
வெற்றி கண்டனள் வீறு கொண்டனள்
புத்தி பெற்றவள் போரும் புரிந்தனள்
பெருமை பெற்றனள் புதுமைப் பெண்ணென!
பிறப் பெடுத்து நற்பேறுகள் பெற்றனள்
காற்றிலேறி யவ்விண் ணையுஞ் சாடினள்
கல்பனா அவள் பேரெனக் கேட்டனம்
கடலி லோடியத் திரை கிழித்தனள்
கன்னி நாமம் ப்ரியாவெனக் கேட்டனம்
உலகிலே பலபெண்க ளிவ்வா றெலாம்
உயர்ச்சி பெற்றனர் முயற்சி கைகூடின
ஏட்டைப் பெண்கள் தொடுவது தப்பென
எண்ணி நின்றவர் சிரம் கவிழ்ந்தனர்
வீட்டைக் காத்தவள் நாட்டை ஆண்டனள்
வெற்றி கண்டனள் வீறு கொண்டனள்
புத்தி பெற்றவள் போரும் புரிந்தனள்
பெருமை பெற்றனள் புதுமைப் பெண்ணென!
ஞாபகங்கள்
aho; - gy;fiyf;fofj;jpy; Clfj;Jiwapid rpwg;G fiyahf fy;tp fw;Fk; ehd; American
center, National peace council and sri paali university Mfpatw;wpd; epjp cjtpAld; nfhOk;gpw;F 3 ehl;fs; fy;tp Rw;Wyh
xd;iw Nkw;nfhz;Nld;.
அம்மா
உதிரத்தில் தாங்கி உயிர் தந்த தாயே
உதிரத்தை பாலாக்கி ஊட்டி வளர்த்தாயே
மதுரமாய் உணவூட்டி வளர்த்தெடுத்த தாயே
மழலை பருவத்தில் கல்வி கொடுத்தாயே
ஊருலகங்கனதா ஒப்பற்ற தாயே
ஓடியோடி எமக்காய் உழைத்தாயே
காரியங்கள் நாளும் களையதுளைத்தாயே
வீரியங்கள் தான்குறைய நோயில் விழுந்தாயே
கல்வியளித்து கடமை கொடுத்தாயே
கடைசியில் எம்மை கைவிட்டாயே
நோய் வரும்போது எம்மை கைவிட்ட தாயே
நூதனமாய் நோய் தாக்க வானில் பறந்தாயே
வேறுலகம் செல்லவென எம்மை மறந்தாயே
நாம்வாழ நீவீழ்ந்த நல்லதொரு தாயே
நன்மை தந்த உம்மை நாம் மறவோம் தாயே
Subscribe to:
Posts (Atom)