கயல் விழி

கயல் விழி
கவிதை சொல்லும் கண்களே என் கவிதைக்கு கருவாகின்றன...! தமிழ் சொல்லும் கவிதை தாய்மொழி சொல்லும் கவிதை எல்லாம் தோற்கின்றன உன் விழி சொல்லும் கவிதையில்...!!

Sunday, April 21, 2013

பொறுப்புடன் நடப்போம் ........

ஜனநாயக நாட்டின் அடிப்படை தூண்களில் ஒன்றாக ஊடகத்துறை காணப்படுகிறது . ஊடகங்களை பொறுத்தவரையில் அவை மக்களுக்கு சமூக பொறுப்புடன் தகவல்களை அளிக்கவேண்டும் என்று கூறப்படுகிறது
. மக்கள் ஊடகங்களில் வரும் தகவல்களை நம்புகின்றனர் எனவே இவை சில ஓழுக்க விழுமியங்களை பின்பற்ற வேண்டியுள்ளது . குறிப்பாக , உண்மை , நேர்மை , இரகசியம் பேணல் , நடுநிலைமை , புறவயத்தன்மை போன்றன குறிப்பிட தக்கன . ஊடக ஆறாம் எனும் பொது அது ஊடகங்களால் மக்களுக்கு ஏற்ப்படக்கூடிய பதிப்பை குறைப்பதற்கும் அதே வேளை சமூக பொறுப்புணர்வோடு தகவலை வெளிப்படுத்தவும் ஏற்ப்பட்டதாகும் .
                                                                               எனினும்  அண்மைக்காலமாக ஊடகங்கள் தமக்குரிய ஊடக அறத்தை பின்பற்றுவதில்லை சமூக   பொறுப்புடன் நடப்பதில்லை இது ஊடகங்கள் விடும் பிழையாகும் ஊடகங்கள் எப்போதும் உண்மையை பேசவேண்டும் அதே நேரம் ஊடகங்கள் உண்மையை பேச ஊடக சுதந்திரம் இருக்க வேண்டும் இச் சுதந்திரம் மட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் . ஊடக சுதந்திரம் இன்று  உலகளாவிய ரீதியில் பல சவால்களை எதிர்   நோக்குகிறது . மக்கள் முழுமையாக ஊடகங்களை நம்புகின்றனர் எனவே ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டிய தேவை காணப்படுகிறது .செய்திகளை வெளியிடும் போது சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் .                        www.mediaethics.com      

No comments:

Post a Comment