கயல் விழி

கயல் விழி
கவிதை சொல்லும் கண்களே என் கவிதைக்கு கருவாகின்றன...! தமிழ் சொல்லும் கவிதை தாய்மொழி சொல்லும் கவிதை எல்லாம் தோற்கின்றன உன் விழி சொல்லும் கவிதையில்...!!

Tuesday, April 23, 2013

கல்வியின் சிறப்பு





கற்றவர் செல்லும் இடமெல்லாஞ் சிறப்பு - கல்வி
கற்றதனா லன்றி வருமோவிச் சிறப்பு
மாபெருஞ் சபைகளில் மாண்புடைச் சிறப்பு
யாவரும் போற்றிடும் கல்வியின் சிறப்பு
பேர்பெறும் ஓரிடம் பெற்றிடும் சிறப்பு
ஊருலகந் தொழும் உன்னதச் சிறப்பு
கடல்கடந்தும் புகழ் பரப்பிடும் சிறப்பு
காவியம் பாடிடும் கவிதையின் சிறப்பு
உடல்தவிர்த் துயிர்செலும் போதிலும் சிறப்பு
உடன்வருஞ் சிறப்பது கல்வியின் சிறப்பு
கலை வளர்த்திடுவதும் கல்வியின் சிறப்பு
நிலைபெறும் சிறப்பது நித்தியச் சிறப்பு
கலைகளில் கவிதையில் கல்வியின் சிறப்பு
விளைபயிர் பசுமைப் புரட்சியில் சிறப்பு
விஞ்ஞானம் வளர்த்திடும் மேன்மையில் சிறப்பு
மெஞ்ஞான மோங்கிடும் ஆன்மிகச் சிறப்பு
கொள்வதும் கொடுப்பதுங் கல்வியின் சிறப்பு
கொள்வதில் கொடுப்பதில் குறையிலாச் சிறப்பு
சொல்லிட முடியாது கல்வியின் சிறப்பு
கல்வியின் சிறப்பே சிறப்பிலுஞ் சிறப்பு!

No comments:

Post a Comment