நொடிக்கு நொடி கணினித் துறையின் வளர்ச்சியால் பல நன்மைகள் இருப்பினும் எமது கலாச்சாரம் பாதிப்படைந்து வருகிறது.குறிப்பாக இன்டநெட் மூலம் முகம் பார்த்துப் பேசுதல்,chating செய்தல் என சிலவற்றைக் கூறலாம்.
முன்பு அறிமுகம் இல்லாதவர்களோடு ஆரம்பத்தில் chating இல் ஆரம்பித்து, அவர்கள் நல்லவர்கள் என்று உள் மனது நம்பும் போது சிறிது காலம் செல்ல web camera மூலம் தம்மை அடையாளப் படுத்த ஆரம்பித்து விடுகின்றனர். எதிரே இருப்பவர்களின் தேவைகள் பூர்த்தியாக மறுபடியும் வேறொரு பெண்ணிடம் இதே விளையாட்டு ஆரம்பித்து விடுகிறார்கள். மறுபுறத்தில் பாதிக்கப் பட்ட பெண்களோ இருட்டையே விரும்புகிறார்கள்.
எமக்கு ஏற்கனவே இருக்கும் நட்பை ஆழமாக்குவதை விடப் புதுப் புது நட்பினைத் தேடுகிறோம். இந்தப் பழக்கத்திலிருந்து மிகச் சுலபமாக விடுபட முடியாது. உண்மையான நட்போ, சொந்தங்களோ face book மூலம் தான் எமக்குக் கிடைக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அப்படிப்பட்டது வெறுமனே பொழுது போக்கிற்காக மட்டும் என்பது பலரது கருத்து..
chating செய்தல் என்பது போதை பழக்கம் போன்று நாளடைவில் எமை அடிமை ஆக்கி விடும். tele serial போன்று குறித்த நேரத்திற்கு எமை வீட்டிற்குத் துரத்தும். இது பலமணி நேரங்களைக் குடிக்கின்றது.
இனி வரும் காலங்களில் போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு மருத்துவ மனைகள் இருப்பதைப் போன்று சற்றிங் செய்வதை மறப்பிப்பதற்கும் மருத்துவமனைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. அத்தோடு ''மாமியார் வீட்டுக்குப் போன மருமகள் ஒரு நாளுக்கு10 மணி நேர சற்றிங்.. இதனால் விவாகரத்து வாங்கத் துடிக்கும் கணவர்.. '' உணவு பரிமாறுவதற்குப் பல முறை அழைத்தும் நீண்ட நேரம் chating இல் இருந்த கணவனின் வயிற்றில் மனைவி கத்திக் குத்து!’’ எனும் தலைப்பில் இனிப் பத்திரிகைகளில் செய்திகள் வெளிரும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.
இனி வரும் காலங்களில் மணமகன்,மணமகள் பார்க்கும் போது படித்தவர்களா பண்பானவர்களா நல்ல குணத்தில் பிறந்தவர்களா மதுப்பழக்கம் உடையவர்களா என்பதோடு chating செய்யும் பழக்கம் உடையவர்களா என்றும் கேட்பார்கள்.

வீட்டுக்கு வரும் ரெலிபோன் அழைப்பையே தமது பெண் பிள்ளைகளை அட்டென் பண்ண அனுமதிக்காத பெற்றோர்,face book கணக்கை மட்டும் திறந்து வைத்திருக்க விட்டிருக்கிறார்களே இது தான் ஏன் என்று புரிய வில்லை.
hi5, face book,skype மூலம் பிரிந்த எமது நண்பர்களின் தொடர்பு மீண்டும் கிடைத்தால் சந்தோஷம் தான் ஆனால் எங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த வாழ்க்கையின் கடைசிக் காலம் மட்டும் பார்க்கவோ, பேசவோ, நினைக்கவோ கூடாத நபர்கள் இருக்கிறார்கள். அவர்களும் இதன் மூலம் தொடர்பினை ஏற்படுத்துவார்களே..? இதனால் அவர்களோடு பழகிய காலங்களில் எமக்கு ஏற்பட்ட துன்பங்கள் மீண்டும் ஏற்படுவதோடு புதிதாகவும் ஊற்றெடுக்கும்.
face book வைத்திருக்கும் ஒருநபர் (A), தெரியாத friend request வந்த நபரை(B) add பண்ணிய பின்பு அவருடைய மன நிலை எப்படி இருக்கும்? சிங்கள இராணுவக் காவலரண்கள் அமைந்திருக்கும் பகுதியில் வயது வந்த பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோரின் மனநிலையைப் போன்றது. எப்போ என்ன ஆகுமோ.. அடி மனதில் ஒரு பயம்..
முன்பெல்லாம் பசங்க, மனசுக்குப் பிடித்த பொண்ணுக்கு லவ்வ சொல்றதுக்கு பொண்ணப் பார்க்க கோயிலுக்குப் போவாங்க.. பொண்ணுகிட்ட லவ்வ சொல்றதுக்கு சில வருடங்கள் கூட ஆகலாம்.ஆனால் இப்போ அப்படி இல்லை.இன்ரநெட்டும்,அவங்க முழுப் பெயரும் தெரிந்தால் சரி FB இல் தேடிப் பிடித்து விடலாம்.இதனால் விரைவாகவே றிசல்ட்டும் கிடைத்து விடும்.

இப்போ பசங்க FB இல் அதிகமான பொண்ணுங்களோடு பழகுவதால்(chat) பொண்ணுங்களின் மனசு எப்படிப் பட்டது என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள் இதனால் எப்படிப் பட்ட பொண்ணுங்களையும் கவுக்க முடியும் என்று சவால் விடுகிறார்கள்.
face book வைத்திருக்கும் 20 பேரைத் தொடர்பு கொண்டு, நீங்கள் computer முன்னாடி அமர்ந்ததும் முதலில் என்ன விடயம் சம்மந்தமாகப் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறீர்கள் என்று கேட்டபோது இதில் 14 பேர்கள் சொன்ன பதில் எமக்கு ஆச்சரியத்தைத் தந்தது. ''நாங்கள் முதலில் பார்வையிடுது face book தான். பின்பு தான் மிகுதி''... என்றார்கள்.
தொலைந்து போன நட்பை மீளப் பெற்ற சந்தோஷத்தை விட மறக்கப்பட வேண்டியவர்களின் தொடர்பு கிடைத்தால் அது மிகக் கொடியது. அதனோடு மறக்கப்பட வேண்டியவர்களையும் மறக்க முடியாது. காரணம் அவர்கள் எங்கு சென்றாலும் face book ஆல் துரத்துவார்கள்.
இதற்குத் தானே face book இல் வேண்டாதவர்களை blog செய்யலாமே...? நிட்சயமாக... அவர்கள் பெயரையோ,புகைப் படத்தையோ ஒரு முறை பார்த்தால் போதுமே... உடனேயே heart நின்றுவிடும் போல் இருக்குமே.. பிறகு அவர்களை blog பண்ணினால் தான் என்ன? பண்ணாமல் விட்டால் தான் என்ன?
சரி .. மனதைத் திடப் படுத்திக் கொண்டு blog பண்ணினாலும் மறுபடியும் எந்தப் பெயரில், எந்தப் புகைப் படத்தோடு வருவார்கள் என்று யாருக்குத் தெரியும்..?

முகப்புத்தகம் மூலம் பல வகையான psycho கள் நடமாடுகிறார்கள். அவர்கள் உங்களிடத்திலும் எவ்வகையிலாவது தொடர்பு கொள்ள முனைவார்கள். மொத்தத்தில் இதன் மூலம் பல பிரச்சனைகளை நாமே உள்வாங்கிக் கொள்கிறோம்..
இறைவன் கொடுத்த வரம்
ஒரு நாள் கடவுள் ஒரு மானிடனின் முன் காட்சி தந்து ''எதற்காக பக்தா என்னை இப்படி விழுந்து விழுந்து அழைக்கின்றாய் உனக்கு அப்படி என்ன தான் வேண்டும்’’ என்றார்.
அதற்கு பக்தனோ ’’ஆண்டவரே நான் இப்பொழுது 60 சதவீதம் ஆனந்தமாக இருக்கிறேன். கூட வேண்டாம் எனக்கு இன்னும் 20 சதவீதம் சந்தோசத்தைக் கூட்டித் தருவாயா?’’ என்றான்.
’’நிச்சயமாகத் தருகிறேன் அதற்கு நீ ஒன்று செய்ய வேண்டுமே. face book என்று ஒன்று இருக்கிறது கேள்விப் பட்டிருக்கிறாயா? அதில் நீயும் புதிதாக இணைந்து கொள்.ஆனால் அதன் மூலம் 20 சதவீத நன்மையை பெற்ற நீ, 10 வீத தீமையையும் அடைவாய். இதற்கு சம்மதமா ?’’என்றார்.
’’ எவ்வளவு சந்தோஷத்தையும் ஏற்றுக் கொள்ளும் எம் போன்ற மானிடர்களுக்கு சிறிதளவு துயரத்தைக்கூட தாங்கும் சக்தியை நீ தரவில்லையே.. அதனால் எனக்கு உள்ள 60 சதவீத ஆனந்தமே போதும்... ஆண்டவரே..
No comments:
Post a Comment