வவுனியா பொது வைத்தியசாலை இக் கிராமத்தில் இருந்து சுமார் 24 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது . இதனால் மக்கள் அருகில் உள்ள செட்டிகுளம் மாங்குளம் ஆகிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலையினையே நாடுகின்றனர் . இவ் வைத்தியசாலைக்கு செல்வதென்றாலும் அரை மணி நேரம் தேவைப்படுகிறது .அத்துடன் இக் கிராமத்தில் முதலுதவி சிகிச்சை கூட இல்லை என வீரபுர சமாதான நீதவான் ஜே . அன்ரனிமுத்து அவர்கள் தெரிவித்துள்ளார் .
மேலும் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் பி .எப் . செல்டன் குறிப்பிடுகையில் இக் கிராமத்தில் போதிய இடவசதி இருந்தும் வைத்தியசாலை இல்லை எனவும் இங்கு ஆயுள்வேத கட்டிடம் காணப்படுகின்ற போதும் இது எவ்வித பயனும் இன்றி பாழடைந்து கால்நடை தங்கவே பயன்படுகிறது என கூறினார் .
இக் கிராமத்தில் வைத்தியசாலை வசதி இல்லாமையினால் அதிகம் பாதிக்கப்படுவது கர்ப்பிணி தாய்மார்களே ஆகும் எனவே இதனை குறித்த தரப்பினர் கவனத்தில் எடுக்க வேண்டும் .
ஆயுள்வேத கட்டிடம் |
ஆயுள்வேத கட்டிடம் |
No comments:
Post a Comment