கயல் விழி

கயல் விழி
கவிதை சொல்லும் கண்களே என் கவிதைக்கு கருவாகின்றன...! தமிழ் சொல்லும் கவிதை தாய்மொழி சொல்லும் கவிதை எல்லாம் தோற்கின்றன உன் விழி சொல்லும் கவிதையில்...!!

Friday, April 19, 2013

புதுமைப்பெண்

பெண்ணிற் பெரியன யாவுள பெண்ணெனும்
பிறப் பெடுத்து நற்பேறுகள் பெற்றனள்
காற்றிலேறி யவ்விண் ணையுஞ் சாடினள்
கல்பனா அவள் பேரெனக் கேட்டனம்
கடலி லோடியத் திரை கிழித்தனள்
கன்னி நாமம் ப்ரியாவெனக் கேட்டனம்
உலகிலே பலபெண்க ளிவ்வா றெலாம்
உயர்ச்சி பெற்றனர் முயற்சி கைகூடின
ஏட்டைப் பெண்கள் தொடுவது தப்பென
எண்ணி நின்றவர் சிரம் கவிழ்ந்தனர்
வீட்டைக் காத்தவள் நாட்டை ஆண்டனள்
வெற்றி கண்டனள் வீறு கொண்டனள்
புத்தி பெற்றவள் போரும் புரிந்தனள்
பெருமை பெற்றனள் புதுமைப் பெண்ணென!

1 comment: