கயல் விழி

கயல் விழி
கவிதை சொல்லும் கண்களே என் கவிதைக்கு கருவாகின்றன...! தமிழ் சொல்லும் கவிதை தாய்மொழி சொல்லும் கவிதை எல்லாம் தோற்கின்றன உன் விழி சொல்லும் கவிதையில்...!!

Friday, April 19, 2013

அம்மா







உதிரத்தில் தாங்கி உயிர் தந்த தாயே
உதிரத்தை பாலாக்கி ஊட்டி வளர்த்தாயே
மதுரமாய் உணவூட்டி வளர்த்தெடுத்த தாயே
மழலை பருவத்தில் கல்வி கொடுத்தாயே
ஊருலகங்கனதா ஒப்பற்ற தாயே
ஓடியோடி எமக்காய் உழைத்தாயே
காரியங்கள் நாளும் களையதுளைத்தாயே
வீரியங்கள் தான்குறைய நோயில் விழுந்தாயே
கல்வியளித்து  கடமை கொடுத்தாயே
கடைசியில் எம்மை கைவிட்டாயே
நோய் வரும்போது எம்மை கைவிட்ட தாயே
நூதனமாய் நோய் தாக்க வானில் பறந்தாயே
வேறுலகம் செல்லவென எம்மை மறந்தாயே
நாம்வாழ  நீவீழ்ந்த நல்லதொரு தாயே
நன்மை தந்த உம்மை நாம் மறவோம் தாயே            

2 comments:

  1. thaai anpai patti eluthappadum anaithum araikuraije...
    enenil...
    aval anpu molikalukkul vasappadatha onru!!!!

    ReplyDelete
  2. மறு முறை உந்தன் கருவறை வேண்டும்

    ReplyDelete