கயல் விழி

கயல் விழி
கவிதை சொல்லும் கண்களே என் கவிதைக்கு கருவாகின்றன...! தமிழ் சொல்லும் கவிதை தாய்மொழி சொல்லும் கவிதை எல்லாம் தோற்கின்றன உன் விழி சொல்லும் கவிதையில்...!!

Tuesday, April 23, 2013

கண்ணீர்

''மனம் ஒரு குழந்தை மாதிரி...
சந்தோஷத்தை மட்டும் தான் எடுத்துக் கொள் ளும்.''
நான்   பெண்கள் பலர் அழுததைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் ஒரு ஆண் கூட அழுததை இதுவரை பார்த்ததில்லை.


 25 வயது மதிக்கத் தக்க பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர். நான் நினைக்கின்றேன் அவளுக்கு வந்திருந்த அந்த text message தான் அந்த அழுகைக்குக் காரணமாக இருக்க வேண்டும். தனது தொலைபேசியைப் பார்த்து அழுது கொண்டிருந்தாள். மறுபடி நான் பார்ப்பதை அவதானித்தவள் கண்ணீரை மறைப்பதற்கு கண்ணாடி அணிந்து கொண்டாள். சிறிது நேரத்தில் திரும்பிப் பார்த்தேன் யாருக்கோ போன் எடுத்துக் கொண்டிருந்தாள். அவள் அழைப்பை எதிர் முனையில் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை.
அழும்போது கண்ணீர் வெளியேறுகிறது அதனால் மனதில் சுமையாக உள்ள கவலைகளும் குறைகின்றன. ஆண்கள் அழுவது மிக மிகக் குறைவு. துயரம் வெறுமனே பெண்களுக்கு மட்டும் தானோ? அல்லது ஆண்களுக்கு அழத் தெரியாதோ? . இல்லை ஆண்கள், சோகம் கூட சுகமானது என்று இருந்து விடுகிறார்களோ?
உடம்பில் உள்ள புறொலக்ரின்(prolactin), அதிரினோ கோர்த்திக்கோத்றொபிக்9(adrenocorticotropic), லியூ-என்ஹிபலின்(Leu-enkephalin), எனும் ஹோர்மோன்களும் பொட்டாசியம்(potassium), மகனீஷும்(manganese) தான் எமக்குக் கண்ணீரை வரவைக்கின்றன.
அதிரினோ கோர்த்திக்கோத்றொபிக் ஹொர்மோன் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
300 பேர் மேல் கொண்ட ஒரு மருத்துவ ஆய்வின் படி, ஆண் ஒருவன் ஒரு மாதத்தில் ஒரு தடவையும், பெண் ஒருத்தி ஒரு மாதத்தில் 5 தடவையும் அழுவதாகத் தெரியவந்துள்ளது. அத்துடன் பெண்களுக்கு மாதவிடாய்க் காலம் நெருங்கும் போழுது சதாரணமாக அழும் விகிதத்திலும் பார்க்க 5 மடங்கு அதிகம் அழும் மனோ நிலையில் இருப்பதாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
Familial dysautonomia, - இது அழவுக்கு அதிகமாக கண்ணீர் சிந்தும் ஒரு நோய்.
Bell's palsy, - இது ஒரு நரம்பியல் கோளாறு. உணவு உட்கொள்ளும் போது தானாகவே கண்ணீர் சிந்தும் நோய்.
மூளைக்கும் கண்ணீர் சுரப்பிக்கும் பாலமாக நரம்புகள் தொழிற்படுக்ன்றன. ஆணிடம் உள்ள ஹொர்மோன்கள் பெண்ணிடம் உள்ள ஹோர்மோன்களில் இருந்து வேறு பட்டவை.
பெண்களில் உள்ள ஹோர்மோன்களில் மன அழுத்தத்திற்குக் காரணமாக உள்ள ஹோர்மோன்கள் அதிகம். எனவே அழும் பொழுது மன அழுத்தத்திற்குக் காரணமான ஹோர்மோன்கள் வெளியேறுவதனால் தான் ஆண்களை விடப் பெண்கள் அதிகமாக அழுகின்றார்கள் என மருத்துவ விஞ்ஞானம் கூறுகின்றது.

2 comments:

  1. some facts are wrong..pls correct
    actually bell's palsy is a idiopathic facial nerve palsy. the complication crocodile eye is the one u mentioned there.
    male female hormones are exactly not verifying each other..except oestrogen progesterone predomination.

    ReplyDelete